சிங்கப்பூரில் எதிர்பார்த்ததை விட பாரிய அளவு வீழ்ச்சியடைந்த பணவீக்கம்
சிங்கப்பூரில் ஒட்டுமொத்தப் பணவீக்கம் மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது.
ஜூன் மாதம் அது 2.4 சதவீதம் பதிவானது. நிபுணர்கள் எதிர்பார்த்ததை விட அது குறைவாகும்.
தனியார் போக்குவரத்து, தங்குமிடம் ஆகியவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாத அடிப்படைப் பணவீக்கம் குறைந்துள்ளது.
மே மாதம் 3.1 சதவீதம் பதிவாகிய அது கடந்த மாதம் 2.9 சதவீதமாக குறைந்துள்ளது.
பெட்ரோல் விலையும் மெதுவாக ஏற்றங்கண்டுள்ளது. உணவு, மின்சாரம், எரிவாயு ஆகியவற்றின் விலை சீராக உள்ளது.
சிங்கப்பூர் நாணய வாரியம் முழு ஆண்டுக்கான ஒட்டுமொத்தப் பணவீக்க முன்னுரைப்பை மறுஆய்வு செய்வதாகக் கூறுகிறது. இந்த மாத இறுதிக்குள் புதிய முன்னுரைப்பை வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
(Visited 18 times, 1 visits today)





