அமெரிக்க தேர்தலில் பைடனின் தீர்மானம் – கடுமையான விமர்சித்த டிரம்ப்
தேர்தல் தோல்வி பயத்தால் ஜோ பைடன் ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகியதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஜோ பைடனின் வெள்ளை மாளிகை உரை தெளிவாக இல்லை என டிரம்ப், விமர்சித்துள்ளார்.
பைடன் விலக மறுத்திருந்தால் கட்சியை விட்டே நீக்கப்பட்டிருப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கரோலினாவில் பிரச்சாரம் செய்த டிரம்ப், தனக்கு எதிராக களமிறங்க இருக்கும் கமலா ஹாரிஸை கடுமையாக விமர்சித்தார்.
அமெரிக்காவுக்குள் சட்டவிரோத நுழைவை தடுத்து நிறுத்த ஜோ பைடன், கமலா ஹாரிஸை நியமித்திருந்த நிலையில், அவர் 2 கோடி பேரை அமெரிக்காவுக்குள் ஊடுருவ விட்டுவிட்டதாக டிரம்ப் குற்றம்சாட்டினார்.
சட்டவிரோதமாக புலம்பெயர்வோரை வேற்று கிரகவாசிகள் என்றும் டிரம்ப் சாடினார்.
(Visited 5 times, 1 visits today)