பைடனுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் – காங்கிரஸ் கட்சி விமர்சனம்!
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் செயற்பாடுகள் தேச துரோக குற்றத்திற்கு வழிவகுக்கலாம் எனவும், இதற்காக அவருக்கு மரணதண்டனை கூட விதிக்கப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும், காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரும், அரசியல் செயற்பாடாளருமான ஸ்டூப் , விமர்சித்துள்ளார்.
பென்னி ஜான்சன் போட்காஸ்டில் அவர் அளித்த செவ்வியில் இவ்வாறு விமர்சனம் செய்துள்ளார். உக்ரைனுக்கு கொத்துக் குண்டுகளை வழங்குவது உள்பட, அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் போதைப்பொருள் கண்டுப்பிடிக்கப்பட்டது வரை பல்வேறு வகையான குற்றச்சாட்டுக்களை பைடனின் அரசாங்கம் எதிர்கொண்டு வருகிறது.
இந்நிலையில், இது குறித்து காங்கிரஸ் கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர். அத்துடன் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இவர்களுடைய விமர்சனம் கவனிக்கதக்கதாக மாறியிருக்கிறது.
அமெரிக்காவில் ஏறக்குறைய 12 ஜனாதிபதிகள் மீது FBI வழக்கு தொடர்ந்திருந்தாலும் தேசதுரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவில்லை. அத்துடன் தேசதுரோக குற்றச்சாட்டு கடுமையான சிறை தண்டனை, நாடு கடத்தல், மரண தண்டனைக்கு வழிவகுக்கிறது.
அமெரிக்க வரலாற்றில் இதுவரை எந்த ஜனாதிபதி மீது இத்தகைய குற்றச்சாட்டு முன்வைக்கப்படாத நிலையில், இந்த குற்றச்சாட்டை பைடன் எதிர்நோக்கியிருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது.