பாரிசை வந்தடைந்த அமெரிக்க ஜனாதிபதி! உக்ரைன் போர் தொடர்பில் முக்கிய பேச்சுவார்த்தை
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் இருவரும் இன்று பாரிஷிக்கு விஜயம் செய்துள்ளார்.
பைடன் பிரான்சில் ஐந்து நாட்கள் இருப்பார் எனவும் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அவர்கள் வருகை தந்துள்ளனர்.
ஓர்லி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இருவரும் வருகை தர, பிரதமர் கேப்ரியல் அத்தால் அவர்களை வரவேற்றார்.
Normadie தரையிறக்கத்தின் 80 ஆவது ஆண்டு நினைவு நாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர். அத்தோடு, உக்ரேனிய ஜனாதிபதி விளாடிமிர் செலன்ஸ்கியையும் சந்தித்து உரையாட உள்ளார். எலிசே மாளிகையில் ஜனாதிபதி மக்ரோனுன் விருந்துபரசாரமும் இடம்பெற உள்ளது.
அதேவேளை, பாதுகாப்பு காரணங்களுக்காக பரிசிலும் இல் து பிரான்சின் சில பகுதிகளிலும் பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஒயிட் ஹவுஸ் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, உக்ரேனுக்கு உதவ 300 பில்லியன் டாலர் உறைந்த ரஷ்ய சொத்துக்களின் பயன்பாடு இந்த வருகையின் போது பிடென் மற்றும் மக்ரோன் ஆகியோரால் விவாதிக்கப்படும் என்றார்.