பைடன் திறமையற்ற நிர்வாகி – ட்ரம்ப் விமர்சனம்!
தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒரு திறமையற்ற நிர்வாகி என முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இதற்கிடையே தற்போது காங்கிரஸ் மற்றும் குடியரசு கட்சிகளுக்கு இடையிலான போட்டி அதிகரித்துள்ளது. ஒருவர் மீது மற்றொருவர் பல முறைப்பாடுகளை முன்வைத்த விமர்சித்து வருகின்றனர்.
அவ்வாறாக லாஸ் வேகாஸில் பிரச்சாரம் செய்த அவர் இவ்வாறு விமர்சித்துள்ளார். இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், குடியேற்றம் மற்றும் பொருளாதாரம் முதல் ஊழல், தேர்தல் மோசடிகள் என பல்வேறு தலைப்புகளில் கீழ் பேசியுள்ளார்.
பைடன் சீனா போன்ற நாடுகளில் இருந்து மில்லியன் கணக்கான டாலர்களை எடுத்ததாகவும், அவரது மகன் ஹண்டர் பைடனின் வணிக பரிவர்த்தனைகளைக் குறிப்பிட்டும் உரையாற்றினார்.
கீஸ்டோன் பைப்லைன் திட்டத்தைத் தடுப்பது மற்றும் தெற்கு எல்லையில் குடியேற்றத்தைக் கையாள்வது உள்ளிட்ட பைடனுடைய பல கொள்கைகளை விமர்சித்த ட்ரம்ப், இறுதியில் அமெரிக்க வரலாற்றில் முன்னோடியில்லாத, திறமையற்ற நிர்வாகி எனவும் கூறினார்.