இலங்கை பொழுதுபோக்கு

இலங்கையில் பிறந்த பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்

பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி திடீர் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார்.

நேற்று இரவு அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழக்கும் போது அவருக்கு 60 வயதாகும்.

இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகர் போண்டா மணி, 1991ம் ஆண்டு வெளியான நடிகர் பாக்யராஜின் ‘பவுனு பவுனுதான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.

தொடர்ந்து பொன்விலங்கு, பொங்கலோ பொங்கல், சுந்தரா டிராவல்ஸ், மருதமலை, வின்னர், வேலாயுதம், ஜில்லா, வசீகரா உள்ளிட்ட 250 திரைப்படங்களுக்கு மேல் நடிகர் போண்டா மணி நடித்துள்ளார்.

அத்துடன், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். அண்மைய நாட்களாக அவர சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சென்னை ஓமந்தூரார் அரசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு இரு சிறுநீரகங்களும் செயலிழந்தநிலையில் நடிகர்கள் அவருக்கு உதவி செய்தனர்.

இந்நிலையில், நேற்று இரவு வீட்டில் திடீரென் மயங்கி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இததனையடுத்து குரோம்பேட்டை அரசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக அறிவித்துள்ளனர். போண்டா மணியின் மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சென்னை பொழிச்சநல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் இறுதிச் சடங்கு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 10 times, 1 visits today)

MP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்