தெற்காசியாவிலேயே சிறந்த கல்வி இலங்கையில் உருவாக்கப்படும் – ஜனாதிபதி ரணில்
தெற்காசியாவில் எதிர்காலத்திற்கு ஏற்ற சிறந்த கல்வி முறையை உருவாக்குவதற்கு தாம் உழைத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இக்கட்டான பொருளாதார நிலைமைக்கு முகங்கொடுக்கும் நிலையிலும் கல்விக்கான நிதியை ஒதுக்குவதற்கு அரசாங்கம் செயற்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
ஹலவத்த, கிரிமதியான பௌத்த பெண்கள் தேசிய பாடசாலையின் முதற்கட்டமாக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடிக் கட்டிடத்தின் திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
நாட்டை அபிவிருத்தி செய்வதே அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் கோஷங்களை எழுப்பி காலத்தை கடத்தும் யுகம் அல்ல எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.
(Visited 6 times, 1 visits today)