இந்தியாவில் ஆட மறுக்கும் வங்கப் புலிகள்! ஐ.சி.சியும் விடாப்பிடி!!
இந்தியாவில் விளையாட முடியாது என பங்களாதேஷ் Bangladesh Team அணி மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
ஐ.சி.சி. டி20 ICC T-20 உலகக் கிண்ண தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாகின்றது. இலங்கை மற்றும் இந்தியாவில் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்நிலையில் தமது அணி இந்தியாவில் விளையாடாது எனவும், அணி பங்கேற்கும் போட்டிகளை இலங்கைக்கு மாற்றுமாறும் பங்களாதேஷ் அணி ஐ.சி.சியிடம் கோரிக்கை விடுத்தது.
எனினும், இந்த கோரிக்கையை ஐ.சி.சி. ஏற்கவில்லை. இறுதி முடிவை எடுப்பதற்காக பங்களாதேஷ் அணிக்கு நேற்றுவரை காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள மாட்டோம் என பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தரப்பில் மீண்டும் இடித்துரைக்கப்பட்டுள்ளது.
“ பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவில் விளையாட மறுக்கும் எங்களது கோரிக்கைக்கு ஐ.சி.சியிடமிருந்து நீதியை எதிர்பார்க்கிறோம்.
பங்களாதேஷ் அணிக்கான போட்டிகளை இலங்கைக்கு மாற்றியமைக்க மீண்டும் கேட்டுக் கொள்கிறோம்.” என்று அந்நாட்டு கிரிக்கெட் சபை கோரிக்கை விடுத்துள்ளது.
பங்களாதேஷின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதால் டி20 உலகக் கிண்ண தொடரில் அவ்வணிக்கு பதிலாக ஸ்கொட்லாந்து அணி மாற்று அணியாக சேர்க்கப்படலாம் என தெரியவருகின்றது.





