மேற்கு வங்காள உள்ளுராட்ச்சி தேர்தல் முடிவுகள்! திரிணாமுல் காங்கிரஸ் அபார வெற்றி
மேற்கு வங்கத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட (உள்ளுராட்ச்சி) பஞ்சாயத்து மற்றும் கிராமப்புற அமைப்பு தேர்தல்களின் வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன.
19 மாவட்டங்களில் உள்ள 696 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற்ற ஒரு நாள் கழித்து இது வந்துள்ளது.
மேற்கு வங்காள உள்ளுராட்ச்சி தேர்தல் 73,887 இடங்களில் 2.06 லட்சம் வேட்பாளர்களின் வெற்றியை தீர்மானிக்க மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி வாய்ந்தவர்களாக இருந்தனர்.
பஞ்சாயத்து தேர்தல் முடிவுகலின் படி திரிணாமுல் காங்கிரஸ் 14,000 கிராம பஞ்சாயத்து இடங்களை வென்று தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது.
அதன்படி
TMC – 14,767
BJP – 3,344
CPI(M) – 1,086
Congress – 783
Independent – 854 என கிராம பஞ்சாயத்து இடங்களை வென்றுள்ளனர்.
எனினும், பல பகுதிகளில் வாக்கு மையம் சூறையாடப்பட்டும், வாக்கு பெட்டிகள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவங்களும் நடந்து அதிர்ச்சி ஏற்படுத்தின.
பல இடங்களில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரசுக்கும், எதிர்க்கட்சிகளான பா.ஜ.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும் இடையே வன்முறை ஏற்பட்டது. வாக்கு பெட்டிகள் எரிப்பு, துப்பாக்கி சூடு போன்ற நிகழ்வுகள் நடந்தன.
இந்த தேர்தலில், 37 பேர் உயிரிழந்துள்ளனர், சனிக்கிழமை வாக்குப்பதிவு நாளில் 18 பேர் கொல்லப்பட்டனர் எனப்து குறிப்பிடத்தக்கது.