தினசரி 15 நிமிடங்கள் நடைப்பயிற்சியால் ஏற்படும் நன்மை – ஆய்வில் வெளியான தகவல்
தினமும் குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வது, மன அழுத்தத்தை குறைப்பதுடன் தூக்கத்தின் தரத்தையும் மேம்படுத்துவதாக மருத்துவ ஆய்வொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அன்றாட வாழ்க்கையின் வேகத்தில், வேலைப் பளு மற்றும் நேரமின்மையை காரணமாக பெரும்பாலானோர் மனநல பராமரிப்பு குறித்து கவனம் செலுத்துவதில்லை.
வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் முக்கியமான அங்கமாக மனநலத்தின் தூய்மை இருப்பதாக நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
முன்னெச்சரிக்கையாக மேற்கொள்ளப்படும் 15 நிமிட உடற்பயிற்சி, மனதின் அழுத்தங்களை குறைத்து, நரம்பியல் அமைப்பை அமைதியாக்கிறது. இதனால் தூக்கத்தின் தரம் உயர்வடைகிறது. இதன் மூலம் ஒட்டுமொத்த உடல்நலனையும் மேம்படுத்துவதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மனச்சோர்வைத் தடுக்கவும், வாழ்க்கையின் தரத்தை உயர்த்தவும், தியானம், நடைப்பயிற்சி, துவிச்சக்கரவண்டி ஓட்டம், நீச்சல் போன்ற இலகுவான உடற்பயிற்சிகளில் வாரத்திற்கு குறைந்தது மூன்று நாட்கள் ஈடுபடுவது பயனளிக்கக்கூடியதாகும்.
உடற்பயிற்சியில் ஈடுபடுவது, தொலைபேசி, கணினி போன்ற டிஜிட்டல் சாதனங்களில் இருந்து சிறிதளவு விலகி இருக்க உதவுவதால், மனதிருப்பம் மற்றும் மெய்நிகர் சோர்வுக்கும் நல்ல தீர்வாக அமைகிறது.
மனநலமே வாழ்க்கையின் அடித்தளமாக கருதப்பட வேண்டிய கட்டத்தில், இந்த ஆய்வின் முடிவுகள், தினசரி வாழ்க்கை முறையில் சிறிய மாற்றங்களை கொண்டு வருவதால் பெரும் பலனை பெற முடியும் என ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





