ஜெர்மனியில் கற்கும் வெளிநாட்டு மாணவர்களால் ஏற்பட்டுள்ள நன்மை

ஜெர்மனிக்கு வெளிநாடுகளிலிருந்து வரும் மாணவர்களால் நிதி கட்டமைப்பிற்கு எவ்வித தீங்கும் விளைவிப்பதில்லை என தெரியவந்துள்ளது.
மாறாக, அவர்கள் பட்டப்படிப்பை நிறைவு செய்து விட்டு, ஜெர்மனியிலேயே தங்கி வரி செலுத்துவதன் மூலம் பொருளாதாரத்திற்கு பெரிதும் உதவுகின்றனர்.
சுமார் 45 சதவீத வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் படிப்பை முடித்த பிறகும் ஜெர்மனியில் தங்கியுள்ளனர்.
2022இல் பட்டம் பெற்ற வெளிநாட்டு மாணவர்கள் அரசாங்க சலுகைகளை விட 15.5 பில்லியன் யூரோக்கள் அதிகம் செலுத்தியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இதன்காரணமாக சர்வதேச மாணவர்களிடமிருந்து பெரும் இலாபத்தை ஜெர்மனி ஈட்டுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜெர்மனியின் பொருளாதாரத்திற்கு உதவ மாணவர்கள் பல ஆண்டுகள் நாட்டிலேயே தங்க வேண்டியதில்லை.
அவர்களில் 40 சதவீதம் பேர் தங்கியிருந்தால், அவர்களின் வரி செலுத்துதல் அவர்களின் கல்விச் செலவுகளை மூன்றே ஆண்டுகளில் ஈடுசெய்யும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஜெர்மன் கல்வி பரிவர்த்தனை சேவை (DAAD) ஜெர்மனி அதிக வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்க வேண்டும் என்று கூறுகிறது.
இது, பல்கலைக்கழகங்கள் மற்றும் வணிகங்களுக்கு இடையே சிறந்த ஒத்துழைப்பை வழங்குவது மற்றும் பட்டப்படிப்புக்குப் பிறகு மாணவர்களுக்கு வேலை தேடுவதை எளிதாக்குகின்றமை குறிப்பிடத்தக்கது.