நெல்லிக்காயை ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டால் ஏற்படும் நன்மை

ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் அற்புதமான காயான ஆம்லா என்னும் நெல்லிக்காய், ஆயுர்வேதத்தில் கிட்டத்தட்ட நூறு விதமான நோய்களை தீர்க்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக கருதப்படும் நெல்லிக்காயில் காணப்படும் கூறுகள் உடல் ஆரோக்கியத்தில் பல நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். ஒரு மாதம் தினமும் நெல்லிக்காயை உணவில் சேர்த்து வந்தால், உடலும் மனமும் புத்துணர்ச்சி அடைந்து, ஒரு 10 வயது குறைந்ததை போல உணருவீர்கள்.
நெல்லிகாயில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
நெல்லிகாயில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, புரதம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் நல்ல அளவில் உள்ளன. நெல்லிக்காயை சாப்பிடுவதால் ஏற்படும் சில நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
டீடாக்ஸ் உணவு
சிறந்த டீடாக்ஸ் உணவாக செயல்படும் நெல்லிக்காய், உடலை டீடாக்ஸ் செய்ய உதவுகிறது. இதன் காரணமாக உடலில் சேரும் நச்சுக்கள், அழுக்குகள் அனைத்தும் மலம் மற்றும் சிறுநீர் மூலம் வெளியேறும். இதனால் உடலும் மனமும் புத்துணர்ச்சி பெரும்.
மூளை ஆரோக்கியம்
நெல்லிக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள், மன அழுத்தத்தை போக்கி மனதிற்கு புத்துணர்ச்சி அளித்து, ஞாபக சக்தியை மேம்படுத்துவதுடன், மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது. நெல்லிக்காய், மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் (Health Tips) சிறந்த உணவு.
குடல் ஆரோக்கியம்
நார்ச்சத்து நிறைந்த அம்லா குடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. மலச்சிக்கல் போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட, நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிடுவது பலன் அளிக்கும்.
உடல் பருமன்
நெல்லிக்காய் மிகச் சிறந்த வெயிட் லாஸ் டயட் தேர்வாக இருக்கும் இதனை உட்கொள்வதால் உடல் பருமன், தொப்பை கொழுப்பு வேகமாக குறைகிறது. கொழுப்பை கரைக்கும் ஆற்றல் கொண்ட நெல்லிக்காய் உடல் பருமனால் அவதிப்படுபவர்களுக்கு அருமருந்து. ஏனெனில் இதில் கலோரிகள் அளவும் குறைவாக உள்ளது. குறிப்பாக வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். கூடுதலாக, தூக்கமின்மையை போக்குகிறது
நோய் எதிர்ப்பு சக்தி
பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக நீங்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுகிறீர்களா? ஆம் எனில், நீங்கள் ஒரு மாதத்திற்கு தினமும் ஆம்லாவை சாப்பிட வேண்டும். வைட்டமின் சி நிறைந்த நெல்லிகாய் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
இதய ஆரோக்கியம்
ஆம்லாவில் உள்ள கூறுகள் இதய ஆரோக்கியத்தை வலுப்படுத்துவதிலும் இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தைக் குறைப்பதிலும் பயனுள்ளதாக இருக்கும். இது தவிர, இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தவும் நெல்லிக்காயை உட்கொள்ளலாம்.
சரும மற்றும் கூந்தல் ஆரோக்கியம்
கூந்தல் மற்றும் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க நெல்லிக்காய் உதவும். நெல்லிக்காய் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, உங்கள் சருமத்திற்கும் நன்மை பயக்கும் என்பதை அறிந்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இது தவிர, ஆம்லா உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தையும் அதிக அளவில் மேம்படுத்தும்.