ஐரோப்பாவில் கொவிட் தடுப்பூசியால் ஏற்பட்டுள்ள நன்மை!
கொவிட் தடுப்பூசிகளால் ஐரோப்பாவில் 1.4 மில்லியன் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனம் 53 நாடுகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில், 277.7 மில்லியனுக்கும் அதிகமான கோவிட் -19 வழக்குகளும், 22 மில்லியன் இறப்புகளும் இதுவரை பதிவாகியுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஐரோப்பாவில் வாழும் 1.4 மில்லியன் மக்கள் குறிப்பாக வயதானவர்கள் பலர் கொவிட் -19 தடுப்பூசியை பெற்றுக்கொண்டதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதாகவும், தடுப்பூசியை போடும் முடிவை எடுத்தமைக்கு அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், WHO ஐரோப்பாவின் பிராந்திய இயக்குனர் ஹான்ஸ் க்ளூஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
முதல் பூஸ்டர் டோஸ் மட்டும் 700,000 உயிர்களைக் காப்பாற்றியதாக தெரிவித்த அவர், குளிர்காலத்தில் மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.