இலங்கை செய்தி

பெலியத்த சம்பவம்!!! சந்தேகநபர்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியஅத்த நுழைவாயிலுக்கு அருகில் நேற்றைய தினம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் சுமார் 02 வருடங்களுக்கு முன்னர் கடவத்தை பிரதேசத்தில் இருவரை சுட்டுக் கொன்ற சந்தேகநபர் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சந்தேக நபர் பஜேரோ ரக ஜீப்பில் இருந்து இறங்கி துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திற்கு சென்ற விதம் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

அதன் பிரகாரம், கடந்த 02 வருடங்களுக்கு முன்னர் கடவத்தை பிரதேசத்தில் இருவரைக் கொன்ற அதே சந்தேகநபராலேயே நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று காலை இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் எமது அபே பல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட 05 பேர் உயிரிழந்துள்ளனர்.

தங்காலை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு கொலை வழக்கில் ஆஜராகச் சென்றபோது அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

உயிரிழந்த 5 பேரும் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொஸ்கொட சுஜீ என்ற பாதாள உலகக் குழு உறுப்பினரின் தலைமையில் இது இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

(Visited 5 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!