5,000 எறும்புகளைக் கடத்த முயன்ற பெல்ஜியத்தைச் சேர்ந்த இளைஞர்கள்

கென்யாவிலிருந்து 5,000 எறும்புகளைக் கடத்த முயன்ற பெல்ஜியத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் இருவரும் 19 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் அரிய வகை எறும்புகளைக் கடத்தி ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் விற்க முயன்றதாக நம்பப்படுகிறது. அவ்வாறு செய்வது ஒரு குற்றம் என்பதை அவர்கள் உணரவில்லை.
அவர்களைப்போலவே ஒரு கென்ய ஆடவரும் வியட்நாமிய ஆடவரும் 400 எறும்புகளைக் கடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது.
இவ்வாறு பூச்சிகளைக் கடத்துவது அந்த நாட்டின் சுற்றுச்சூழலையும் பூச்சியின் எண்ணிக்கையையும் பாதிக்கும்.
எறும்புகளின் நடவடிக்கைகள் பயிர்களின் வளர்ச்சிக்கும் மண்ணின் தரத்திற்கும் மிகவும் முக்கியம் என்று ஆப்பிரிக்க வனவிலங்குச் சமூகத்தின் தலைவர் கூறினார்.
இத்தகைய கடத்தல் சம்பவங்களால் விவசாயம் பாதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.