ஐந்து அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பில் விடுவித்த பெலாரஸ்
பெலாரஸ் நாட்டின் தலைவர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ தனது உள்நாட்டு எதிரிகள் மீது கொடூரமான அடக்குமுறையைத் தொடங்கி கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, ஐந்து அரசியல் கைதிகளை ஒரு அரிய பொது மன்னிப்பில் விடுவித்துள்ளார்.
1994 முதல் நாட்டை வழிநடத்தி வரும் 69 வயதான அவர், சர்ச்சைக்குரிய 2020 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதாகக் கூறிய பின்னர் வெகுஜன அடக்குமுறைகளைத் தொடங்கினார்.
இதைத் தொடர்ந்து நடந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
அவர் தலைநகர் மின்ஸ்கில் செய்தியாளர்களுடனான ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது, சில “கடுமையாக நோய்வாய்ப்பட்ட” கைதிகளை விடுவிக்கும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினர்.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக மூன்று ஆண்களும் இரண்டு பெண்களும் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
முன்னணி மனித உரிமைகள் குழுவான வியாஸ்னாவின் கூற்றுப்படி, பெலாரஸில் இன்னும் 1,400 க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் குறிப்பிடத்தக்கது.