பல வெளிநாட்டு கைதிகள் உள்ளடங்களாக 52 கைதிகளை விடுவித்த பெலாரஸ்!

பெலாரஸ் 52 கைதிகளை விடுவித்துள்ளது, அவர்கள் லிதுவேனியாவிற்குள் நுழைந்துவிட்டதாக லிதுவேனிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
விடுவிக்கப்பட்டவர்களில் 14 வெளிநாட்டினர் – ஆறு லிதுவேனியர்கள், இரண்டு லாட்வியர்கள், இரண்டு போலந்துகள், இரண்டு ஜெர்மானியர்கள், ஒரு பிரெஞ்சு நாட்டவர் மற்றும் ஒரு இங்கிலாந்து நாட்டவர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மாதம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பெலாரஸின் சர்வாதிகார ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோவிடம், அதிகமான கைதிகளை விடுவிப்பது குறித்து பேசியிருந்தார்.
இதன் அடிப்படையில் குறித்த கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
(Visited 1 times, 1 visits today)