31 அரசியல் கைதிகளை விடுதலை செய்த பெலாரஸ் : மொத்தமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் விடுதலை!
பெலாரஸில் 31 அரசியல் கைதிகளை மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
விடுவிக்கப்பட்டவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படவில்லை, ஆனால் லுகாஷென்கோவின் அலுவலகம் அவர்களில் 17 பேர் நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் முன்னாள் கைதிகள் பெலாரஷ்ய சிறைகளில் மருத்துவ பராமரிப்பு மற்றும் சுகாதார நிலைமைகள் மோசமாக இருப்பதாக குறைக்கூறி வருகின்ற நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விடுவிக்கப்பட்ட கைதிகள் “தீவிரவாத இயல்பின் குற்றங்களுக்காக” தண்டிக்கப்பட்டுள்ளனர் என்று அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லுகாஷென்கோ இந்த ஆண்டு மொத்தமாக 115 அரசியல் கைதிகளை விடுதலை செய்துள்ளார்.
வரும் ஆண்டில் (2025) பெலாரஸில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதன் ஒரு பகுதியாக இந்த விடுதலை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.