சீனாவில் சடுதியாக குறைந்த மக்கள் தொகை – அதிரடி திட்டங்களை அறிமுகப்படுத்தும் அரசாங்கம்
சீனாவில் சடுதியாக குறைந்த மக்கள் தொகை குறைந்து வரும் நிலையில்பிறப்பு விகிதத்தை உயர்த்தத் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
மக்கள்தொகையில் அறுபது ஆண்டாக முதலிடத்தில் இருந்த சீனா தற்போது இரண்டாவது இடத்துக்குச் சென்றதுடன், இந்தியா முந்தியுள்ளது.
கடந்த ஆண்டு சீனாவில் ஆயிரம் பேருக்கு சுமார் ஏழு குழந்தைகள் என்ற அளவில் பிறப்பு விகிதம் வெகுவாகச் சரிந்தது. இவ்வாண்டு அது மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலவசக் கல்வி, திருமணமாகாத பெண்களுக்குச் சம உரிமை போன்ற பல புதிய திட்டங்களைச் சீனா முன்வைக்கிறது.
சீனாவின் முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பதும் பிறப்பு விகிதம் குறைவதும் முக்கியக் கவலைகளாக இருக்கின்றன.
(Visited 3 times, 1 visits today)