குளிர்கால மனச்சோர்வா? ‘சன்லைட் தெரபி’ மூலம் புத்துணர்ச்சி பெறுவது எப்படி?
குளிர்காலத்தில் பகல் நேரம் குறைவாகவும், இரவு நீளமாகவும் இருப்பதால் சூரிய ஒளி நமக்குக்கிடைப்பது அரிது. இது மூளையில் உள்ள வேதிப்பொருட்களில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனால் மனச்சோர்வு, அதிகத் தூக்கம் மற்றும் உடல் சோர்வை உண்டாக்குகிறது. இதைத் தவிர்க்க ‘சன்லைட் தெரபி’ (Sunlight Therapy) எவ்வாறு உதவுகிறது என்பதைப் பார்ப்போம்.

சன்லைட் தெரபி’ (Sunlight Therapy) யானது இயற்கையான சூரிய ஒளி. அதற்கு இணையான செயற்கை ஒளியைப் பயன்படுத்தி உடலைச் சீரமைக்கும் முறையாகும். இதில் இரண்டு வகைகள் உள்ளன:
அதில் முதலாவது இயற்கை ஒளி இது நேரடியாகச் சூரிய வெளிச்சத்தில் இருந்து கிடைப்பது.
இரண்டாவது ஒளி பெட்டி (Light Box ). இது சூரிய ஒளிக்கு இணையான 10,000 லக்ஸ் (Lux) திறனுள்ள ஒளியை உமிழும் கருவியைப் பயன்படுத்துவது. குறைந்த சக்தி கொண்ட ஒளியைப் பயன்படுத்தினால் நீண்ட நேரம் அதன் முன் அமர வேண்டியிருக்கும். ஆனால் 10,000 லக்ஸ் ஒளியில் 20 முதல் 30 நிமிடங்கள் அமர்ந்தாலே மூளைக்குத் தேவையான சமிக்ஞை கிடைத்துவிடும்.
செரோடோனின் (Serotonin) எனப்படுவது சூரிய ஒளி உடலில் படும்போது ‘மகிழ்ச்சி ஹார்மோன்’ எனப்படும் செரோடோனின் சுரப்பு அதிகரிக்கிறது. இது மனநிலையை உற்சாகமாக வைத்திருக்க உதவுகிறது.
மேலும் இரவு நேரத்தில் தூக்கத்தைத் தூண்டும் மெலடோனின் ஹார்மோன்(Melatonin Hormone), ஆனது பகலில் ஒளி படும்போது குறைகிறது. இதனால் பகல் நேரத் தூக்கம் மற்றும் மந்தநிலை தவிர்க்கப்படுகிறது.
காலை நேர சூரிய ஒளி நமது உடலில் உள்ள உறுப்புகளின் செயற்பாட்டை சீரமைத்து, சரியான நேரத்தில் பசி மற்றும் தூக்கம் ஏற்பட உதவுகிறது.

தூங்கி எழுந்த முதல் ஒரு மணி நேரத்திற்குள் 20 முதல் 30 நிமிடங்கள் இளவெயிலில் இருப்பது சிறந்தது.
வெளியில் செல்ல முடியாதவர்கள், சூரிய ஒளி நன்றாக வரும் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து வேலை செய்யலாம். அல்லது ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து காலை உணவை உண்ணலாம். மழைக்காலம் போன்ற மேகமூட்டம் இருந்தாலும், வெளியில் சென்று சிறிது தூரம் நடப்பது வீட்டிற்குள் இருப்பதை விட அதிகப் பலன் தரும்.
சூரிய ஒளி உடலில் படும்போது, உடலுக்குத் தேவையான விட்டமின் D கிடைக்கிறது. இது கிடைப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. மேலும், மன அழுத்தம், பதற்றம் (Anxiety) மற்றும் இரவு நேரத் தூக்கத்தின் தரம் மேம்படவும் உதவுகிறது.
உங்களுக்குத் தீவிரமான மனச்சோர்வு இருந்தால்,இந்த ஒளி சிகிசையை பெட்டியைப் பயன்படுத்தும் முன் ஒரு மனநல மருத்துவரை அணுகுவது நல்லது.





