ஆசியா

ஜப்பானில் பேரங்காடிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய கரடி; ஊழியர் படுகாயம்

ஜப்பானில் அகிடா நகரத்தில் உள்ள பேரங்காடி ஒன்றில் கரடி புகுந்து ஊழியரைத் தாக்கியிருக்கிறது.நவம்பர் 30ஆம் திகதி உள்ளூர் நேரப்படி அதிகாலை 6.20 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

மத்திய அகிடாவின் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள அகிடா நகரம், மேற்கில் ஜப்பானிய கடலின் எல்லையோரத்தில் உள்ளது. இந்நகரம், இயற்கை நிலவனப்புக்குப் பெயர் போனது.சில சமயங்களில் வனவிலங்குகளின் இந்நகரத்திற்குள் வலம் வருவது வழக்கமாகும்.

நாற்பது வயது பேரங்காடி ஊழியருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டிருந்தது. அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்று உள்ளூர் காவல்துறை தெரிவித்தது.

ஊழியரின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

காலை 11.00 மணி வரையிலும் ஒரு மீட்டர் நீளமிருந்த கரடி பேரங்காடியிலேயே இருந்தது. உள்ளூர் அதிகாரிகள் கரடியைப் பிடிக்கும் முயற்சியில் நுழைவாயிலில் இரண்டு பொறிகளை வைத்திருந்தனர்.

பேரங்காடியின் விற்பனைப் பிரிவுக்கு இட்டுச் செல்லும் பாதையில் ஊழியரை கரடி தாக்கியது. அந்த சமயத்தில் 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பேரங்காடியைத் திறப்பதற்கான ஏற்பாடுகளில் மூழ்கியிருந்தனர்.

(Visited 2 times, 2 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்