கொரோனா காலத்தில் ICC விதித்த தடையை நீக்கிய BCCI

கிரிக்கெட் பந்தை ஸ்விங் செய்ய எச்சில் தடவுவது ஒரு வழக்கம். கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் கிரிக்கெட் பந்து மீது எச்சில் தடவுவதற்கு கடந்த 2020ம் ஆண்டு ICC தடை விதித்தது.
இந்நிலையில், கிரிக்கெட் பந்தை பளபளப்பாக்க மீண்டும் எச்சில் பயன்படுத்தலாம் என BCCI தெரிவித்துள்ளது.
மும்பையில் அனைத்து கேப்டன்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கேப்டன்களின் ஒப்புதலுக்கு பிறகு இந்தத் தடையை BCCI நீக்கியுள்ளது.
இந்த நடைமுறை நடப்பு IPL தொடரில் இருந்தே அமலுக்கு வருகிறது என BCCI அதிகாரிகள் தெரிவித்தனர்.
(Visited 2 times, 1 visits today)