விளையாட்டு

BBL13 – சாம்பியன் பட்டம் வென்ற பிரிஸ்பேன் ஹீட்

பிக்பாஷ் லீக் தொடரின் 13-வது சீசன் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இந்த தொடர் டிசம்பர் 7-ம் தேதி தொடங்கியது.

இந்தத் தொடரின் இறுதிப்போட்டி இன்று சிட்னியில் நடைபெற்றது. இதில் சிட்னி சிக்சர்ஸ் அணியும், பிரிஸ்பேன் ஹீட் அணியும் மோதின.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பிரிஸ்பேன் ஹீட் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்தது. ஜோஷ் பிரவுன் 53 ரன்னும், ரென்ஷா 40 ரன்னும் அடித்தனர்.

சிட்னி அணி சார்பில் சீன் அபாட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து, 167 ரன்கள் எடுத்தால் சாம்பியன் பட்டம் வெல்லலாம் என்ற இலக்குடன் சிட்னி அணி களமிறங்கியது.

பரபரப்பாக நடைபெற்ற ஆட்டததில் சிட்னி அணி 17.3 ஓவரில் 112 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, பிரிஸ்பேன் ஹீட் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டம் பெற்றது.

பிரிஸ்பேன் அணியின் ஸ்பென்சர் ஜான்சன் 4 விக்கெட்டும், பார்ட்லெட், ஸ்வெப்சன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது ஸ்பென்சர் ஜான்சனுக்கு அளிக்கப்பட்டது.

(Visited 4 times, 1 visits today)
Avatar

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ

You cannot copy content of this page

Skip to content