இலங்கை செய்தி

பிபிசி நிறுவனத்துக்கு 3.44 கோடி ரூபா அபராதம்

அந்நிய நேரடி முதலீடு விதிமீறல் தொடர்பாக பிபிசி இந்தியா நிறுவனத்துக்கு, இந்திய அமலாக்கத் துறை 3.44 ரூபா கோடி அபராதம் விதித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அதேபோல், விதிமீறல் காலக்கட்டத்தில் பிபிசியின் ஒளிபரப்புகளை மேற்பார்வையிட்ட அதன் மூன்று இயக்குநர்களுக்கும் தலா ரூ.1.14 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பிபிசி உலக சேவை இந்தியா நிறுவனத்தின் மீது அந்நிய நேரடி முதலீடு மேலாண்மைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை தனது விசாரணையை கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது.

பிபிசி நிறுவனத்தின் டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்திய இரண்டு மாதங்களுக்கு பின்பு அமலாக்கத் துறையின் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அந்நிய நேரடி முதலீடு மேலாண்மைச் சட்டத்தின் கீழ் விதிமீறலுக்காக பிபிசி உலக சேவை இந்தியா நிறுவனத்துக்கு அமலாக்கத் துறை அபராதம் விதித்துள்ளது.

அந்நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட மொத்த அபராதத் தொகை ரூ.3,44,48,850 ஆகும்.

(Visited 32 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!