இலங்கை

மட்டக்களப்பில் கடலில் மூழ்கி பாடசாலை மாணவர்கள் இருவர் பலி!

மட்டக்களப்பு, கொக்குவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சவுக்கடி கடற்கரை பகுதியில் கடலில் குளிக்கச் சென்ற, இம்முறை சாதாரண தர பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

வகுப்புக்கு செல்வதாக சனிக்கிழமை மாலை கூறிச்சென்ற மாணவர்களே இவ்வாறு கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்தவர்கள் கறுப்பங்கேணி விபுலானந்தா கல்லூரியில் இருந்து இம்முறை சாதாரண தரப் பரீட்சை எழுதவிருக்கும் 16 வயதுடைய மாணவர்கள் என கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் கறுப்பங்கேணியை சேர்ந்த டானியல் றோகித் (16), இருதயபுரத்தினை சேர்ந்த நிரோசன் பிரவீன்த் (16) ஆகியோர் என உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த கடற்பகுதியில் குளித்துக்கொண்டிருக்கும் போது அலையில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு திடீர் மரண விசாரனை அதிகாரி எம்.யூ.அப்துல் ஹக்கீம் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று சடலங்களை பார்வையிட்டு மரண விசாரணையினை மேற்கொண்டதுடன், பிரேத பரிசோதனைக்காக சடலங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரனைகளை கொக்குவில் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

(Visited 6 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்