இலங்கை

மட்டக்களப்பு- நாட்டில் மழை பெய்ய வேண்டி விசேட தொழுகை

நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை நீங்கி மழை பெய்யவேண்டுமென ஆசிக்கும் விசேட தொழுகையும் பிரார்த்தனையும் இன்று (30) மட்டக்களப்பு – ஏறாவூர்ப் பிரதேசத்தில் நடைபெற்றன.

ஏறாவூர் ஜம்இய்யத்து உலமா சபையின் ஏற்பாட்டில் ஏறாவூர் அலிகார் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது மௌலவி எல்எச். அப்துல்லா ஹாஷிமி தொழுகை நடாத்தினார்.

இதையடுத்து கூட்டுப்பிரசங்கம் நடைபெற்றது. உலமா சபையின் புதிய தலைவர் மௌலவி ஏஎல். சாஜித் ஹுஸைன் பாகவி பிரார்த்தனை நடாத்தினார்.

மார்க்க அறிஞர்கள், மதரசா மாணவர்கள் , பொதுமக்கள் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள் என பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.பிரார்த்தனையில் பங்கேற்றவர்கள் மனமுருகி பாவமன்னிப்புக்கோரி பிரார்த்தனை செய்தனர்.

கிழக்கு மாகாணத்தில் மிக நீண்டகாலமாக மழை பெய்யாததன் காரணமாக நீர்நிலைகள் வற்றியுள்ளதையடுத்து சில பிரதேசங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.மேலும் காட்டிலுள்ள பிராணிகள் குடிநீரின்றி அவஸ்த்தைப்டுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளளது.இந்த நிலையினைக்கருத்திற்கொண்டு ஏறாவூர் ஜம்இய்யத்து உலமா இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் சபை கூட்டுப்பிரார்த்தனை நடாத்த ஏற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 9 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்