இலங்கை

மட்டக்களப்பு – கொழும்பு ரயில் சேவை பாதிப்பு – 2 யானைகள் பாதிப்பு

மட்டக்களப்பு நோக்கி எரிபொருளை ஏற்றிச் சென்ற ரயிலில் காட்டு யானைக் கூட்டம் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

கொலன்னாவை எண்ணெய் சேமிப்பு நிலையத்திலிருந்து இந்த ரயில் பயணித்துள்ளது.

கல்லோயா – ஹிங்குரான்கொடை ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பல காட்டு யானைகள் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளது.

ரயிலின் நான்கு எரிபொருள் தாங்கிகள் தடம்புரண்டுள்ளதுடன் இரண்டு எரிபொருள் தாங்கிகள் கவிழ்ந்துள்ளது.

அத்துடன் ரயிலின் இயந்திர சாரதி மற்றும் கட்டுப்பாட்டாளர் பயணித்த ரயில் பெட்டிகளும் தடம்புரண்டுள்ளன.

இதேவேளை, மட்டக்களப்பு – கொழும்பு பிரதான மார்க்கத்தில் இயங்கும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் இன்று காலை கொழும்பு கோட்டையிலிருந்து – மட்டக்களப்பு வரை இயக்கப்படவிருந்த ரயில் சேவையையும், மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி இயக்கப்படவிருந்த ரயில் சேவையையும் இரத்து செய்ய ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்