இலங்கை

மட்டு. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மாவட்ட அமைப்பாளர் மற்றும் மகனுக்கு விளக்கமறியல் நீடிப்பு

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் மற்றும் அவரது மகனுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிபதி முன்பாக ஒருவர் ஆஜர்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது சுகவீனம் காரணமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படாத நிலையில் அவரது மகன் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு எதிர்வரும் 10ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

மாவீரர் தினத்தன்று மாவீரர் தின நிகழ்வுகளை ஏற்பாடுசெய்த குற்றச்சாட்டின் கீழ் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இருவரும் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!