இலங்கை

சுகயீனம் என அமெரிக்காவில் இருந்து மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பசில்

மாத்தறை பிரதேசத்தில் காணி கொள்வனவு செய்தமை தொடர்பிலான வழக்கின் மூன்றாவது பிரதிவாதியாக உள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, எதிர்வரும் விசாரணை திகதியில் நீதிமன்றத்தில் ஆஜராக அனுமதி பெற்றுள்ளார்.

மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக அமெரிக்காவில் இருந்து மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

குறித்த காணி கொள்வனவு செய்யப்பட்ட விதம் தொடர்பான வழக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த காணி கனடாவில் வசிக்கும் பசில் ராஜபக்சவின் மனைவியின் சகோதரியின் பெயரில் ஜேர்மன் பிரஜை ஒருவரிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணியை கொள்வனவு செய்வதற்கு அவரது கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது.

எனினும், பணம் எவ்வாறு பெறப்பட்டது என்பதை அவர்கள் நிரூபிக்கத் தவறியதால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை அடுத்த நீதிமன்ற தினத்தில் நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!