பிரித்தானியாவில் முக்கிய பகுதிகளில் உள்ள வங்கிகள் மூடப்படவுள்ளதாக அறிவிப்பு!
பிரித்தானியாவில் கடந்த 09 ஆண்டுகளில் இதுவரை 6000 வங்கிக் கிளைகள் மூடப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தரவு வெளியாகியுள்ளது.
இதன்படி இன்று (17.05) எட்டு பார்க்லேஸ் கிளைகள் மூடப்பட்டுள்ளன.
தரவுகளுக்கு அமைய NatWest, Royal Bank of Scotland மற்றும் Ulster Bank ஆகியவற்றை உள்ளடக்கிய NatWest குழுமம், 1,360 கிளைகளை மூடியுள்ளது.
அதேபோல் Lloyds Bank, Halifax மற்றும் Bank of Scotland ஆகியவற்றைக் கொண்ட Lloyds Banking Group, 1,146 தளங்களை மூடியுள்ளது என்று நுகர்வோர் குழு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே பல்வேறு வங்கிகள் 2024 ஆம் ஆண்டில் 200இற்கும் மேற்பட்ட கிளைகளை மூடவுள்ளதாக தெரிவித்துள்ளன. அதேபோல் தற்போது, மேலும் 24 வங்கிக் கிளைகள் 2025 இல் மூட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மில்லியன் கணக்கான நுகர்வோர் டிஜிட்டல் முறையில் வங்கிச் சேவைக்கு மாறியிருந்தாலும், அணுகக்கூடிய மாற்று வழிகளின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், கணிசமான எண்ணிக்கையிலான மக்கள் இன்னும் தயாராக இல்லை அல்லது அதைச் செய்யத் தெரியவில்லை என்பதை நுகர்வோர் குழு சுட்டிக்காட்டியுள்ளது.