ஐரோப்பா செய்தி

பிரான்சில் நான்கு நாட்களுக்கு வங்கி பரிவர்த்தனைகள் நிறுத்தம்

பிரான்சில் அடுத்து வரும் நான்கு நாட்களுக்கு வங்கி பரிவர்த்தனைகள் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மார்ச் 28 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 6 மணி முதல் ஏப்ரல் 2 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.30 மணி வரை இந்த வங்கி பரிவர்த்தனைகள் தடைப்பட உள்ளன.

குறித்த திகதிகளில் ஊதியம் பெறுபவர்கள், குறித்த நாட்களில் அதை பெற முடியாது எனவும், 2 ஆம் திகதியின் பின்னரே  பணம் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பரிவர்த்தனை தடையானது ஒவ்வொரு ஆண்டும் இடம்பெறும் சாதாரண நிகழ்வாகும். கடந்த 20 ஆண்டுகளாக இவ்வாறு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஈஸ்ட்டர் விடுமுறையின் போது வங்கி பரிவர்த்தனைகள் இடம்பெறாது என்பது தொடர்பில் பொதுமக்கள் அவதானதுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!