வங்கி வட்டி விகிதங்கள் மேலும் குறையும்!

எதிர்காலத்தில் வங்கி வட்டி வீதம் ஒற்றை இலக்கமாக குறையும் என ஜனாதிபதி செயலணியின் தலைவர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “வங்கி வட்டி மிக மோசமான நேரத்தில் 34% ஆக இருந்தது.
இப்போது அது 16% லிருந்து 17% ஆக குறைந்துள்ளது. ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டத்தால் இது இன்னும் குறையும். ஒற்றை இலக்கத்திற்கு வரும். பிறகு எளிதாகிவிடும்.
வங்கியை சமாளிக்கவும், கடன் வாங்கவும், உங்கள் தொழிலை விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
(Visited 15 times, 1 visits today)