டாக்கா ஏரியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பங்களாதேஷ் பத்திரிகையாளர்
பங்களாதேஷ் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் அந்நாட்டின் தலைநகர் டாக்காவில் உள்ள ஏரியில் சடலமாக மீட்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
32 வயதான சாரா ரஹனுமா என்ற பத்திரிகையாளரின் சடலம் டாக்காவின் ஹதிர்ஜீல் ஏரியில் மிதந்து கொண்டிருந்தது.
சாரா ரஹனுமா, காசி டிவி மீடியாவில் நியூஸ்ரூம் ஆசிரியராக இருந்தார் என்று உள்ளூர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சாராவின் உடலை சாகர் என்ற நபர் கண்டுபிடித்தார், அவர் அவளை மருத்துவமனைக்கு கொண்டு வந்தார். “ஹதிர்ஜீல் ஏரியில் அந்தப் பெண் மிதப்பதை நான் பார்த்தேன். பின்னர், அவர் DMCH க்கு கொண்டு வரப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்,” என்று அவர் குறிப்பிட்டார்.
சாரா ரஹனுமாவின் மரணம், நாட்டில் கருத்துச் சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட மற்றொரு கொடூரமான தாக்குதல் என்று வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வாசேத் தெரிவித்துள்ளார்.
X இல் ஒரு இடுகையில் சஜீப் வாசேத், “ரஹ்முனா சாரா காசி டிவி செய்தி அறை ஆசிரியர் இறந்து கிடந்தார். அவரது உடல் டாக்கா நகரில் உள்ள ஹதிர்ஜீல் ஏரியில் இருந்து மீட்கப்பட்டது. இது வங்காளதேசத்தில் கருத்துச் சுதந்திரத்தின் மீதான மற்றொரு கொடூரமான தாக்குதல். காசி டிவி ஒரு மதச்சார்பற்ற செய்தி என்று தெரிவித்தார்.