அசாமில் தரையிறங்கிய வங்கதேச பலூன்
வங்கதேசத்தில்(Bangladesh) இருந்து வந்ததாகக் கூறப்படும் ஒரு பெரிய எரிவாயு பலூன் அசாமின்(Assam) கச்சார் மாவட்டத்தில் மீட்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தின் சில்ஹெட்டில்(Sylhet) அமைந்துள்ள கிலாச்சாரா த்விமுகி(Kilachara Dwimukhi) உயர்நிலைப் பாடசாலையின் பெயர் பலூனில் எழுதப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“வழக்கத்திற்கு மாறான பெரிய” பலூன் ஒரு விவசாய வயலில் விழுந்ததாகவும், அது உடனடியாக கவனத்தை ஈர்த்ததாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். அதனை கண்டு பயந்த கிராமவாசிகள் கிராம பாதுகாப்புக் கட்சிக்கு(VDP) தகவல் அளித்தனர் பின்னர் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பலூனில் மூன்று நபர்களின் புகைப்படங்களும் வங்காள மொழியில் எழுதப்பட்ட உரையும் இருந்தன.





