ஷேக் ஹசீனாவாக நடித்த வங்கதேச நடிகை கொலை வழக்கில் கைது

வங்காளதேச நாட்டை சேர்ந்த பிரபல நடிகை நுஸ்ராத் பரியா (வயது 31). 2023ம் ஆண்டு, பிரபல மறைந்த இயக்குநர் ஷியாம் பெனிகல் இயக்கத்தில் வெளிவந்த முஜிப்: தி மேகிங் ஆப் எ நேசன் என்ற, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து ரசிகர்கள் மற்றும் அந்நாட்டு மக்களிடையே புகழ் பெற்றார்.
கடந்த ஆண்டு ஜூலையில் ஹசீனாவுக்கு எதிராக உள்நாட்டில் கலவரம் வெடித்து பரவியது. இதில் கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுக்காக பரியாவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், தாய்லாந்து நாட்டுக்கு செல்வதற்காக டாக்காவில் உள்ள ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.
பரியாவின் கைது நடவடிக்கையை பட்டா மண்டல உதவி ஆணையாளர் சபிகுல் இஸ்லாம் உறுதி செய்துள்ளார்.
(Visited 1 times, 1 visits today)