பங்களாதேஷ் மகளிர் அணி வெற்றி

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை மகளிர் அணி ஆறு விக்கெட்டுகளால் தோல்வியடைந்தது.
கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி இருபது ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 145 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் கிரிக்கட் அணி 19 ஓவர்கள் 5 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 146 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.
இதேவேளை, இலங்கையுடனான 3 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்பதற்காக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி எதிர்வரும் 29ஆம் திகதி தீவுத்திடலுக்கு வரவுள்ளது.
இந்த மூன்று ஒரு நாள் போட்டிகளும் ஜூன் 2, 4 மற்றும் 7 ஆம் திகதிகளில் சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெறவுள்ளன.
(Visited 16 times, 1 visits today)