இலங்கைக்கு எதிரான T20 தொடரை கைப்பற்றிய வங்கதேச

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்று வரும் முன்றாவது T20 போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பில் பெத்தும் நிஸ்ஸங்க அதிகபட்சமாக 46 ஓட்டங்களையும், தசுன் சானக்க 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
அதன்படி, 133 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 16.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
பங்களாதேஷ் அணி சார்பில் தன்சிட் ஹாசன் ஆட்டமிழக்காமல் 73 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட நிலையில், அணித்தலைவர் லிட்டன் தாஸ் 32 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
இந்த வெற்றியின் ஊடாக இலங்கைக்கு எதிராக பங்களாதேஷ் அணி T20 தொடர் ஒன்றை வெல்லும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.