பாகிஸ்தானுக்கு எதிரான T20 தொடரை கைப்பற்றிய வங்கதேசம்

பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகள் மோதிய முதல் டி20 போட்டியில் யாரும் எதிர்பாரத வகையில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது.
இந்நிலையில் பாகிஸ்தான் – வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேசம் அணி 20 ஓவர் முடிவில் 133 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜகர் அலி 55 ரன்கள் குவித்து ஆட்டழந்தார்.
இதனையடுத்து பாகிஸ்தான் அணி களமிறங்கியது. முதல் 6 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.
இதனை தொடர்ந்து ஃபஹீம் அஷ்ரஃப்- அப்பாஸ் அஃப்ரிடி ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இறுதியில் பாகிஸ்தான் அணி 19.2 ஓவரில் 125 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் வங்கதேச அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.
இரு அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி வருகிற 24ந் தேதி நடக்கிறது.