பாகிஸ்தானுக்கு நேரடி விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் வங்கதேசம்
அரசு நடத்தும் பிமான் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ்(Biman Bangladesh Airlines) ஜனவரி 29 முதல் டாக்கா(Dhaka) மற்றும் கராச்சி(Karachi) இடையே நேரடி விமானங்களை மீண்டும் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான இடைவிடாத விமான இணைப்பை மீண்டும் மீட்டெடுக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“ஆரம்பத்தில் விமானங்கள் வாரத்திற்கு இரண்டு முறை வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இயக்கப்படும்” என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது
இந்த விமானம் உள்ளூர் நேரப்படி இரவு 8:00 மணிக்கு டாக்காவில் இருந்து புறப்பட்டு இரவு 11:00 மணிக்கு கராச்சியை வந்தடையும். திரும்பும் விமானம் நள்ளிரவு 12:00 மணிக்கு கராச்சியில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4:20 மணிக்கு டாக்காவை வந்தடையும்.





