இந்தியர்களுக்கான தூதரக சேவையை இடைநிறுத்தியது பங்களாதேஷ்: டெல்லியில் 25 பேர் கைது!
இந்தியர்களுக்கான விசா மற்றும் தூதரக சேவைகளை இடைநிறுத்தும் முடிவை பங்களாதேஷ் எடுத்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷில் இந்துக்களுக்கு எதிரான வன்முறை தலைவிரித்தாடுகின்றது. இதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதற்கிடையில் பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் ஒருவர் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள விவகாரம் இரு நாடுகளுக்கிடையில் இராஜதந்திர மோதலை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையிலேயே டெல்லி , கொல்கத்தா, சென்னை மற்றும் மும்பை உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டுவரும் பங்களாதேஷ் தூதரகங்கள் ஊடாக வழங்கப்படும் சுற்றுலா உள்ளிட்ட விசாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான விசாக்கள் வழங்கப்படுகின்றன.
அதேவேளை, டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த 25 பங்களாதேஷ் பிரஜைகள் மாநில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.





