எல்லை மோதல்களுக்கு மத்தியில் மியான்மர் தூதரை வரவழைத்த வங்கதேசம்
மியான்மர்(Myanmar) மற்றும் வங்காளதேச(Bangladesh) எல்லையில் நிலவும் பதற்றத்தை தொடர்ந்து, டாக்காவிற்கான மியான்மர் தூதர் கியாவ் சோ மோவை(Kyaw Soe Moe) வங்காளதேசம் வரவழைத்துள்ளது.
மியான்மரின் ரக்கைன்(Rakhine) மாநிலத்தில் சண்டை அதிகரித்து வருவதால், வங்காளதேசம் மற்றும் மியான்மர் எல்லையில் சமீபத்தில் வன்முறை அதிகரித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மியான்மரின் ரக்கைன் மாநிலம் மற்றும் பங்களாதேஷ் எல்லைக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 9 வயது ஹுசைஃபா அப்னான்(Husayfa Abnan) சிறுமி காயமடைந்துள்ளார்.
பின்னர் திங்களன்று, டெக்னாப்பில்(Teknab) உள்ள வைகாங்(Waikang) எல்லை அருகே கண்ணிவெடி வெடித்ததில் 28 வயது நபர் ஒருவர் தனது காலை இழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மியான்மர் தூதரை அழைத்து, எதிர்காலத்தில் இதுபோன்ற எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதல்களை தடுக்க முழுப் பொறுப்பையும் தேவையான நடவடிக்கைகளையும் மியான்மர் எடுக்க வேண்டும் என்று வங்காளதேசம் முறையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.





