ஆசிய கோப்பை தொடருக்கான வங்காளதேச அணி அறிவிப்பு

17வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9ந்தேதி முதல் 28ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது.
இந்த தொடர் இம்முறை டி20 வடிவில் நடத்தப்பட உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன.
இந்நிலையில் இந்த தொடருக்கான வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. லிட்டன் தாஸ் தலைமையிலான அந்த அணியில் தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான் போன்ற முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
அத்துடன் இந்த அணியே எதிர்வரும் நெதர்லாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் விளையாடும் என வங்காளதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
அணி விவரம்: லிட்டன் தாஸ் (கேப்டன்), தன்சித் ஹசன், பர்வேஸ் ஹொசைன் எமோன், சைப் ஹாசன், தவ்ஹித் ஹ்ரிடோய், ஜேக்கர் அலி அனிக், ஷமிம் ஹொசைன், குவாஸி நூருல் ஹசன் சோஹன், ஷக் மஹேதி ஹசன், ரிஷாத் ஹொசைன், நசும் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், தன்சிம் ஹசன் சாகிப், தஸ்கின் அகமது, ஷோரிபுல் இஸ்லாம், ஷைப் உதீன்.