ஷேக் ஹசீனா மற்றும் குடும்பத்தினருக்கான சிறப்புப் பாதுகாப்பை ரத்து செய்த வங்கதேசம்
பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது நெருங்கிய உறவினர்களின் தூதரக கடவுச்சீட்டுகளை ரத்து செய்த சில நாட்களுக்குப் பிறகு அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புப் பாதுகாப்பை வங்காளதேசத்தின் இடைக்கால அரசு திரும்பப் பெற்றுள்ளது.
தலைமை ஆலோசகர் பேராசிரியர் முஹம்மது யூனுஸ் தலைமையில் ஆலோசகர்கள் குழு, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது நெருங்கிய உறவினர்களுக்கான சிறப்புப் பாதுகாப்பை நீக்கும் சிறப்புப் பாதுகாப்புப் படைச் சட்டம் 2021ஐத் திருத்த முடிவு செய்ததாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
76 வயதான ஷேக் ஹசீனா, ஆகஸ்ட் 5ஆம் தேதி இந்தியாவுக்குத் தப்பிச் சென்றதையடுத்து, வங்கதேச அதிபர் முகமது சஹாபுதீன் நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.
ஷேக் ஹசீனா தற்போது பங்களாதேஷில் 75 க்கும் மேற்பட்ட வழக்குகளை எதிர்கொள்கிறார், அவற்றில் கிட்டத்தட்ட பாதி கொலைக் குற்றச்சாட்டுகள்.