டி20 உலகக் கோப்பை போட்டிகளை இந்தியாவிற்கு வெளியே மாற்றுமாறு வங்கதேசம் மீண்டும் வலியுறுத்தல்
வங்கதேச(Bangladesh) கிரிக்கெட் வாரியம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம்(ICC) 2026ம் ஆண்டிற்கான ஆண்கள் டி20 உலகக் கோப்பை குறித்து விடுத்த கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
வங்கதேசத்தின் போட்டிகளை இந்தியாவிற்கு வெளியே இடமாற்றம் செய்வது குறித்து பரிசீலிக்குமாறு வங்கதேச கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், பாதுகாப்புக் கவலைகளைக் காரணம் காட்டி இந்தியாவுக்குப் பயணம் செய்யாதது குறித்த தனது நிலைப்பாட்டை வங்கதேச கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது.
போட்டித் திட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்த போதிலும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் நிலைப்பாட்டில் மாறாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.





