உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் பங்களாதேஷ் முன்னேற்றம்!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் பங்களாதேஷ் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டிநேற்று நிறைவடைந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை பங்களாதேஷ் முழுமையாக கைப்பற்றியது. இரண்டாவது டெஸ்ட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லிட்டன் தாஸுக்கு ஆட்டநாயகன் விருதும், தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட மெஹிதி ஹாசன் மிராஸுக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தவரிசை
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றியதன் மூலம், பங்களாதேஷ் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தவரிசையில் பங்களாதேஷ் 45.83 சதவிகித வெற்றிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணி 19.05 சதவிகித வெற்றிகளுடன் 8-வது இடத்தில் உள்ளது.
இந்திய அணி 68.52 சதவிகித வெற்றிகளுடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலிய அணி 62.50 சதவிகித வெற்றிகளுடன் இரண்டாவது இடத்திலும் மற்றும் 50.00 சதவிகித வெற்றிகளுடன் நியூசிலாந்து அணி மூன்றாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.