ஆசியா

பங்களாதேஷ் பொதுத்தேர்தல்; தொடர்ந்து 4வது முறையாக பிரதமரான ஷேக் ஹசீனா

பிரதான எதிர்க்கட்சியின் பொது வேலைநிறுத்தத்துக்கான அழைப்பு மற்றும் வன்முறை சம்பவங்களுக்கு மத்தியில், தொடர்ந்து 4வது முறையாக நாட்டின் பிரதமராக ஷேக் ஹசீனாவை தேர்வு செய்யும், பங்களாதேஷின் 12வது பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.

அவாமி லீக் கட்சியின் ஷேக் ஹசீனா 2008ம் ஆண்டு முதல் பங்களாதேஷின் பிரதமராக இருந்து வருகிறார், இன்று வாக்குப்பதிவு நடைபெறும் பொதுத்தேர்தலை பிரதான எதிர்க்கட்சியான வங்காளதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) பொதுவேலை நிறுத்தத்தின் வாயிலாக புறக்கணிப்பதால், ஷேக் ஹசீனா நான்காவது முறையாக வெற்றி பெறத் தயாராக உள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டு வீட்டுக்காவலில் உள்ள முன்னாள் பிரதமர் கலிதா ஜியா தலைமையிலான பிஎன்பி தேர்தல் புறக்கணிப்புக்கு அழைப்பு விடுத்தது. நேற்று காலை 6 மணிக்கு தொடங்கிய நாடு தழுவிய 48 மணி நேர பொது வேலைநிறுத்தத்திற்கு அக்கட்சி அழைப்பு விடுத்திருந்தது. ’சட்டவிரோத அரசு ராஜினாமா செய்ய வேண்டும், கட்சி சார்பற்ற நடுநிலை அரசை நிறுவ வேண்டும், அனைத்து கட்சித் தலைவர்கள் மற்றும் செயல்வீரர்களை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுவதாக பிஎன்பி தெரிவித்துள்ளது.

Bangladesh Election LIVE: Polling underway as Sheikh Hasina set to retain  power amid opposition boycott - India Today

தேர்தலை முன்னிட்டு கடந்த சில தினங்களாகவே வன்முறை மற்றும் தீ வைப்பு சம்பவங்கள் அங்கு நடந்தேறி வருகின்றன. பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு மையங்களாக நியமிக்கப்பட்ட 5 பள்ளிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. முன்னதாக ஜெஸ்ஸோர் – டாக்கா பெனாபோல் விரைவு ரயிலுக்கு தீ வைக்கப்பட்டதில் 4 பேர் கொல்லப்பட்டனர்.தேசத்தின் தலைமை தேர்தல் ஆணையர் காசி ஹபிபுல் அவல், பொதுத்தேர்தல் சட்டபூர்வமாகவே நடைபெறுவதாக உறுதி தெரிவித்திருக்கிறார். பரவும் வன்முறை சம்பவங்களை கட்டுக்குள் கொண்டுவர ராணுவத்தின் களமிறக்கப்பட்டுள்ளனர்.

https://twitter.com/i/status/1743294299184480693

வன்முறையைத் தூண்ட வேண்டாம் என எதிர்க்கட்சிகளை கேட்டுக்கொண்ட, பிரதமர் ஹசீனா மறுபக்கம் எதிர்க்கட்சிகளின் பிரதான தலைவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோரை கைது செய்து சிறையிலடைக்க உத்தரவிட்டார். ஜனநாயகம் இல்லாமல் போனது, பொருளாதாரம் சீர்குலைந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் ஹசீனாவுக்கு எதிராக வலுவாக உள்ளன. அவர் மீண்டும் ஆட்சி அமைக்க நேரிடினும் நாட்டின் பொருளாதார ஸ்திரமின்மை பெரும் சவாலாக இருக்கும்.

இந்தியாவைச் சேர்ந்த மூவர் உட்பட 125 வெளிநாட்டு பார்வையாளர்கள் பொதுத்தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 350 பேர் கொண்ட நாடாளுமன்றத்தில் 300 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறும். 50 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு, தேர்தலுக்குப் பிந்தைய நாடாளுமன்ற கட்சிகளின் பலத்தின் அடிப்படையில் அவற்றுக்கான நியமனம் நடைபெறும்.சுமார் 2,000 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர், அவர்களில் 5.1% பெண்கள். உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதி மாலை 4 மணிக்கு முடிவடைய உள்ளது. வாக்குப்பதிவு முடிந்த வேகத்தில் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கி, திங்கள்கிழமை காலை முதலே முடிவுகள் வெளியாக உள்ளன.

(Visited 3 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்