பங்களாதேஷ் வெள்ளத்தில் சிக்கி 8 பேர் பலி – 2 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிப்பு
இந்த வாரம் பங்களாதேஷில் ஏற்பட்ட வெள்ளத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது.
மேலும் கனமழையால் பெரிய ஆறுகள் கரைபுரண்டு ஓடுவதால் இரண்டு மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
நூற்றுக்கணக்கான ஆறுகளின் குறுக்கே 170 மில்லியன் மக்களைக் கொண்ட தெற்காசிய நாடு, சமீபத்திய தசாப்தங்களில் அடிக்கடி வெள்ளங்களைக் கண்டுள்ளது.
ஷாஜதூரில் வெள்ள நீரில் படகு கவிழ்ந்ததில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்ததாக வடக்கு கிராமப்புற நகரத்தின் காவல்துறைத் தலைவர் சபுஜ் ராணா தெரிவித்தார்.
“சிறிய படகில் ஒன்பது பேர் இருந்தனர். ஏழு பேர் நீந்திக் காப்பாற்றப்பட்டனர். இரண்டு சிறுவர்களுக்குநீரில் மூழ்கினர்,” என்று அவர் தெரிவித்தார்.
குரிகிராமில் உள்ள காவல்துறைத் தலைவரான பிஷ்வதேப் ராய்,இரண்டு வெவ்வேறு மின்கசிவு சம்பவங்களில் மேலும் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார்.
நாடு முழுவதும் வெள்ளம் தொடர்பான தனித்தனி சம்பவங்களில் மேலும் மூன்று பேர் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.