பங்களாதேஷ் தேர்தல் – அவாமி லீக் போட்டியிடாவிட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கை
பங்களாதேஷின் பொதுத் தேர்தலில் அவாமி லீக் கட்சியைப் போட்டியிட முடியாமல் செய்வதன் மூலம் பாதகமான விளைவுகள் ஏற்படுமென அதன் தலைவரும், முன்னாள் பிரதமருமான ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
அவாமி லீக் தேர்தலில் போட்டியிடாத பட்சத்தில் பெருமளவு வாக்காளர்கள் அதனைப் புறக்கணிக்கக்கூடுமென ஹசீனா அம்மையார் குறிப்பிட்டார்.
அவர் ரொயிட்டர் செய்தி ஸ்தாபனத்திற்கு அனுப்பிய மின்னஞ்சலில் இந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் பங்களாதேஷில் இடம்பெற்ற மாணவர் புரட்சியால் பதவி கவிழ்க்கப்பட்ட ஹசீனா அம்மையார் தற்போது இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.
இந்த நிலையில் பங்களாதேஷின் இடைக்கால ஆட்சியாளரான மொஹமட் யூனுஸ் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் தேர்தலை நடத்தத் தயாராகிறார். ஆனால், அதில் அவாமி லீக் போட்டியிடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
(Visited 3 times, 3 visits today)





