சிகிச்சை முடிந்து மருத்துவமனையை விட்டு வெளியேறிய வங்கதேச கிரிக்கெட் வீரர்

உள்ளூர் போட்டியின் போது ஏற்பட்ட மாரடைப்பால் பாதிக்கப்பட்டு சில நாட்களுக்குப் பிறகு, வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தமீம் இக்பால் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.
திங்கட்கிழமை 50 ஓவர் டாக்கா பிரீமியர் டிவிஷன் கிரிக்கெட் லீக்கின் ஒரு போட்டியில் முகமதியன் ஸ்போர்டிங் கிளப்பை வழிநடத்திச் சென்றபோது, கடுமையான மார்பு வலி இருப்பதாகக் கூறி அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அதே நாளில் தமனி அடைப்பை சரிசெய்ய மருத்துவர்கள் ஸ்டென்ட்களைச் பயன்படுத்தினர், பின்னர் தமீம் தலைநகர் டாக்காவில் உள்ள ஒரு பெரிய சுகாதார நிலையத்திற்கு மாற்றப்பட்டார்.
“அவரது உடல்நிலையைக் கவனித்த பிறகு, இன்று அவரை டிஸ்சார்ஜ் செய்ய முடிவு செய்துள்ளோம்,” என்று எவர்கேர் மருத்துவமனையின் மருத்துவர் ஷஹாபுதீன் தாலுக்தர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.
“அவர் விரைவில் கிரிக்கெட்டுக்குத் திரும்ப முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று மருத்துவர் தெரிவித்தார்.