வங்கதேசத்தில் ஐபிஎல் தொடர் ஒளிபரப்ப தடை
இந்த ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக்(IPL) தொடரை ஒளிபரப்ப வங்கதேச(Bangladesh ) இடைக்கால அரசாங்கம் தடை விதித்துள்ளது.
இது அண்டை நாடான இந்தியாவுடனான வளர்ந்து வரும் சர்ச்சையின் சமீபத்திய நடவடிக்கை ஆகும்.
வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மானை(Mustafizur Rahman) கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(Kolkata Knight Riders) அணியிலிருந்து நீக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(BCCI) எடுத்த முடிவைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முஸ்தாபிசுர் போன்ற நட்சத்திர வீரர் தொடரில் இருந்து முறையற்ற முறையில் நீக்கப்பட்டது நியாயமற்றது என்று நாட்டின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மறு அறிவிப்பு வரும் வரை இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒளிபரப்பு செய்வதை நிறுத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி





